மத்திய தெற்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிவுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் மீனவர்கள் யாரும் மத்திய தெற்கு வங்ககடல் பகுதிக்கும் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிக்கும் செல்லவேண்டாம் என்றும் அடுத்த இரண்டு நாட்க்களுக்கு தென் மேற்கு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மீனவர்கள் நாளை மாலைக்குள் வீடு திரும்ப வேண்டும் என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்க்கான வாய்ப்புகள் இல்லை என்றும் வெரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தெற்கு ஆந்திரா வடக்கு தமிழகத்தை ஒட்டி கரையை கடக்கும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை தமிழகத்தில் வரண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment