
இந்தியாவில் தற்போது ஆன்லைன் சந்தை விற்பனைகள் கொடிகட்டி பறந்துவருகிறது. விழாகால சலுகைகள் என்று அதிரடி விலைகுறைப்பில் பிராண்டடு செல்போன்களை குறிப்பிட்ட நாட்க்களில் விற்றுதீர்த்துவிடுகிறார்கள்.இவர்கள் விற்பனை செய்யும் 25 சதவித செல்போன்கள் பிராண்டடு பெயர் கொண்ட சீன செல்போன்கள் தானாம். இப்படி இவர்களிடம் ஏமார்ந்த வாடிக்கையாளர்கள் ஒன்றோ இரண்டோ கிடையாதாம் .சிலருக்கு பிராண்டடு போன் என்று கூறி சீன போன்களை விற்றிருக்கிறார்கள் இன்னும் சிலருக்கு பார்சலில் போனுக்கு பதில் டிஜர்டென்ட் பார்களும் சிப்ஸ் பாக்கேட்களும் வந்துள்ளதாம்.
இந்நிலையில் நடிகர் நகுலன் சமீபத்தில் ஃபிலிப்கார்ட் நிறுவனத்திடம் ஐ போன் ஒன்றை ஆடர் செய்திருக்கிறார்.ஆனால் அவருக்கு பார்சலில் வந்த ஐ போன் போலியானது என்று அந்த பார்சலை பிரித்து பார்த்தபோதுதான் நகுலுக்கு தெரியவந்துள்ளது.இதையடுத்து தனக்கு வந்த போலி ஐ போனை ஃபிலிப்கார்ட் நிறுவனத்திற்க்கே திருப்பி அனுப்பிவிட்டார் நகுலன் இதுதொடர்பாக நகுலன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் ஃபிலிப்கார்ட் நிறுவனம் தவறுகளை சரிசெய்துகொண்டால் நல்லது என்றும் மக்கள் ஆன்லைன் சந்தைகளில் பொருட்கள் வாங்கும்போது கவணமாக வாங்கவேண்டும் என்று கூறிவுள்ளார்.
No comments:
Post a Comment