Monday, 10 December 2018

ஒரு பேனரால் நின்றுபோன திருமணம்! என்ன பேனர் தெரியுமா!






ஆரணி அருகே ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தீவிர திமுக பிரமுகர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தவர். இவரது மகள் சந்தியா. இவருக்கும் சண்முகம் என்பவருக்கும் பெரியவர்கள் கல்யாண நிச்சயம் செய்தார்கள்.

பொருத்தம் எல்லாம் நன்றாக இருந்து வந்த நிலையில் ஒரே ஒரு விடயத்தில் மட்டும் பொருந்தாமல் இருந்துள்ளது. அது என்னவென்றால் மாப்பிள்ளை வீட்டார் அ.தி.மு.க- வைச் சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் இதனை பெரிதுபடுத்தாமல் திருமண வேலைப்பாடுகள் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.

நேற்று காலை திருமணம் நடைபெற இருந்த வேளையில் மணமக்களை வாழ்த்தி பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க பேனர் மற்றும் கட்சிக் கொடி இருந்துள்ளது. இதனை அவதானித்த மாப்பிள்ளை சத்தம் போட்டுள்ளார்.

வார்த்தையால் ஆரம்பித்த சண்டை கடைசியில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனை அவதானித்த மணப்பெண் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை இவ்வளவு பிரச்சினை செய்கிறார் அதனால் எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மகளின் திருமணத்தை நடத்த நினைத்த தந்தை திருமணத்திற்கு வந்திருந்த தங்கை மகனை தனது பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனை கோபித்துக் கொண்டு சென்ற முன்னாள் மாப்பிள்ளைக்கு தெரியவரவே அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



Source: Manithan.com

No comments:

Post a Comment