Friday, 7 December 2018

இரண்டு விஜய் ரசிகர்கள் அதிரடியாக கைது செய்யபட்டனர்





விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் ஏ ஆர் ரஹமான் இசையில் உருவாகி தீபாவலியன்று வெளியானது சர்கார் .

சர்கார் படம் வெளியாவதற்கு முன்பே கதை திருடபட்ட கதை என்று புகார் எழும்பியது பிறக இயக்குனர் கே.பாக்கியராஜ் தலையிட்டு கதை திருட்டு பிரட்சனையை சுமுகமாக முடித்துவைத்தார்.

இதையடுத்து தீபாவலியன்று உலகமுழுவதும் திரைக்குவந்தது சர்கார் .கொதித்தெழுந்தது ஆளும் கட்சி காரணம் படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் சில அதிமுக அரசை தாக்குவதுபோல இருந்துள்ளது.
குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் விலைவு மோசமாக இருக்கும் என்று அதிமுகவினர் அறிக்கைவிட்டனர்.இதனால் சர்கார் படத்தில் இருந்த சர்ச்சை காட்சிகள் நீக்கபட்டது.

இதனால் அரசின் மேல் கடும் கோபமடைந்தனர் விஜய் ரசிகர்கள் அரசு கொடுத்த இலவச மிக்ஸி  கிரைண்டரை தீயில் போட்டு அதை வீடியோ எடுத்து சமூக தளங்களில் பரப்பினார்கள் இதில் இரண்டு பேர் அதற்கும் ஒரு படிமேலே போய் கையில் அருவாலுடன் அரசை மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தனர்.அந்த வீடியோவில் இருக்கும் இருவரையும் கைது செய்ய கொரி உத்தரவிட்டது.

இந்நிலையில் மிரட்டல் விடுத்த இருவரையும் காவல்த்துறையினர் சைபர் கிரைம் அதிகாரிகளின் உதவியோடு அதிரடியாக கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment