Saturday, 20 June 2020

ஜூன் 21 வானியல் நிகழ்வு வெறும் கண்களால் பார்த்தாள் ஆபத்து! Jun 21 Solar Eclipse Dont See Without glass Vir4.Tv


வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 21ம் தேதி) அன்று பார்சியல் சோலார் எக்ளிப்ஸ் எனப்படும் பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse) உருவாக உள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் நிலவு பயணிக்கும் போது சூரிய கிரகணம் உருவாகிறது.
சூரிய கிரகணம் உச்சமடையும் போது சென்னை மக்களால் சூரிய கிரகணத்தை காண இயலும். சூரியனின் 34% பகுதி சந்திரனால் மறைக்கப்பட்டிருக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் (Executive Director of Tamil Nadu Science and Technology Centre) தலைமை இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் அறிவித்துள்ளார்.  காலை 10:22 மணிக்கு துவங்கி மதியம் 1:41 மணிக்கு நிறைவடைகிறது இந்த சூரிய கிரகணம். கிரகணம் உச்சத்தில் இருக்கும் நேரம் பகல் 11:58 மணியாகும்.
Ad

மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது மிக ஆபத்து என்று தெரிவிக்கபட்டுள்ளது.

No comments:

Post a Comment