வடதமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டிவந்த பெய்ட்டி புயல் காக்கிநாடாவில் இன்று மதியம் கரையை கடந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மேலும் படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம் மற்றும் ஆந்திராவை நோக்கிவந்தது இதன் காரணமாக சென்னையில் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது வடதமிழகத்தை பொருத்தவரை மேகமுட்டத்துடன் அதி குளுமையான தரை காற்று வீசியது.
புயலானது ஆந்திர காக்கிநாடாவை நெருங்கும் பட்சத்தில் வட தமிழக கடல் கரை பகுதிகளில் கடல் கொந்தளித்த நிலையிலிருந்தது கடலோர மாவட்டங்களில் மழை எதிர்பார்த்தநிலையில் ஒரு தூரல் கூட வரவில்லை.
இந்நிலையில் இன்று மதியம் ஆந்திர காக்கி நாடா மற்றும் ஏனாமக்கும் இடையே பெய்ட்டி புயல் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 90கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசியது.
சில இடங்களில் மிதமான மழை பெய்தது மற்ற இடங்களில் பலமான மழை பெய்தது
No comments:
Post a Comment