வீரப்பனின் மகள் வித்யா ராணி கடந்த சனிக்கிழமையன்று பாஜகவில் இணைந்தார்.
தமிழ்நாடு கிருஷ்ணகிரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜக பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்நிலையில் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார்.
Ad
மேலும் இதுபற்றி வீரப்பனின் மகள் வித்யா ராணி கூறுகையில் "ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் அவர்களின் சாதி, மத வேறுபாடின்றி நான் பணியாற்ற விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் மக்களுக்கானவை, அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்று வித்யா ராணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment