ஜியோ வருகைக்குப் பின்னர் பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட பிற மொபைல்போன் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.35 க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, இன்கம்மிங் அழைப்புகளை பெற முடியும் என அறிவித்தன. இது வாடிக்கையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்க்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து, குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளை நிறுத்தக் கூடாது என டிராய் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 72 மணி நேரங்களுக்கு முன்பாக, எஸ்எம்எஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
Source: Dinamalar
No comments:
Post a Comment