Wednesday, 12 December 2018

தோண்டும்போது உள்வாங்கிய தரைப்பகுதி வெளிப்பட்ட நரகத்தின் வழி! வீடியோ




மத்திய ஆசியாவில் உள்ளது துர்க்மெனிஸ்தான் 40 வருடங்களுக்கு முன் மண் எண்ணை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் துர்க்மெனிஸ்தானில் உள்ள ஒரு பாலைவனத்தில் டிரில்லிங் செய்து தொண்ட முயற்சித்தனர் திடிரென அப்படியே அப்பகுதி 70 மீட்டர் 230 அடி விட்டம் கொண்ட ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது அதிஷ்டவசமாக அங்கிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இதையடுத்து பள்ளத்தில் இருந்து மீதேன் எரிவாய்வு கேஸ் வெளியேரியதால் அதை தடுக்க அங்கிருந்த விஞ்ஞானிகள் பள்ளத்தை தீவைத்து பற்றவைத்தார்கள் ஒரிரு நாட்க்களில் தீ அணைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர் மாறாக தீ தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்துள்ளது அன்று தொடங்கி இன்று வரை 40வருடமாக எரிந்தபடியே இருக்கிறது அந்த பள்ளம்.

துர்க்மெனிஸ்தான் மக்கள் அந்த பள்ளத்தை நரகத்தின் வாசல் என்று தான் அழைக்கிறார்கள் காரணம் அந்த பள்ளத்தில் இரவு நேரத்தில்  ஒலிக்ககூடிய சத்தம்! மணிதற்கள் கத்தி கதறுவதை போல் சத்தம் கேட்ப்பதனால் அந்த பள்ளத்தில் தீய சக்திகள் இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் அச்சமடைகிறார்கள் அதை தொடர்ந்து அப்பள்ளத்தை சுற்றிலும் துரு நாற்றம் வீசுகிறதாம் .


வீடியோ இணைப்பு கீழே



2 comments: