Thursday, 6 December 2018

விடிந்தாலும் முடியாத நிகழவு! அவஸ்தையில் வாகண ஓட்டிகள்!






அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வருகின்ற நிலையில் நகரின் சில இடங்களில் கடும் பனிமூட்டம் கானப்பட்டது இதனால் வாகண ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சில இடங்களில் கடும்பனி பொழிவு நிகழ்ந்ததால் வாகண ஓட்டிகள் எதிரே வரும் வாகணங்களை பார்க்கமுடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.விடிகாலை மூன்று மணிக்கு துவங்கிய பனிமூட்டம் காலை எட்டு மணியாகியும் தெளிவாகவில்லை சூரிய உதயத்தையே மறைக்கும் அளவிற்க்கு மனிமூட்டம் வலுவாக கானப்பட்டது.

அதன் பிறகு காலை ஒன்பது மணியளவில் பனி மூட்டம் குறைந்து  சிறிது சிறிதாக சூரிய வெளிச்சம் நகரேங்கும் பாய்ந்தது.

No comments:

Post a Comment