Tuesday, 5 February 2019

50வருட கட்டுபாட்டை உடைத்து சாதித்த ஒரே ஹீரோ அஜித்!



தல அஜித்தின் நடிப்பில் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகி பொங்களுக்கு வெளியாகி மூன்றாவது வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் படம் விஸ்வாசம்.
படத்தில் அக்ஷன் மற்றும் ரொமேன்ஸ் இருந்தாலும் தந்தை மகள் சென்டிமண்டு தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறபடுகிறது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தை விரைவில் கன்னட மொழியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
கன்னடத்தில் வெளியான அஜித் படங்களில் இது மூன்றாவது படமாகும்.
கர்நாடகா சினிமாவை பொருத்தவரை கன்னட ஹீரோ ,கன்னட ஹீரோயின்கள் படம் மட்டுமே வெளியாக வேண்டும்
மற்ற மொழிகள் அதிலும் குறிப்பாக தமிழ் படங்கள் கர்நாடகாவில் டப் செய்து வெளியிடக்கூடாது.


இந்த 50வருட கட்டுப்பாட்டினை தல அஜித் 2017ஆம் அண்டு உடைத்தார்.
காரணம் தல அஜித் நடிப்பில் கெளவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தை 'சத்ய தேவ் ஐ.பி.எஸ் 'என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்து வெளியிட்டனர்.
இதனால் கோவமடைந்த கன்னட அமைப்பினர் சிலர் சத்ய தேவ் ஐ.பி.எஸ் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் சில மீது தாக்குதல் நடத்தினர்.
சில கன்னட நடிகர்கள் தங்களது ரசிகர்களை ஏவி விட்டு தாக்குதல் நடத்தினார்கள்.

இவ்வளவு எதிர்ப்புகளையும் தாண்டி கன்னடத்தில் சத்ய தேவ் திரைப்படம் நல்ல வசூலை குவித்தது.இதையடுத்து கடந்த வருடம் அஜித்தின் விவேகம் படத்தையும் கன்னடத்தில் டப் செய்து வெளியிட்டனர்.
தற்போது மூன்றாவது முறையாக விஸ்வாசம் படமும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வேறு எந்த ஹீரோவும் செய்ய முடியாத சாதனையை அஜித் செய்துள்ளார் என்று தமிழ் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர் .

INSTALL INAP360 ENJOY FREE LIVE TVS,GAMES, FREE MOVIES ,DEVICE PROTECTOR ,MOBILE ANTI VIRUS ,MOBILE SAFETY ,   JUNK FILE SCANER ,  INSTALL RIGHT NOW Awesome Options  INSTALL NOW .      INAP360 ANDROID APPLICATION                           

மேலும் தல அஜித்திற்கு கர்நாடகாவில் அதிக ரசிகர்கள் இருப்பதும்.சில வருடங்களுக்கு முன் அஜித்திற்கு கோவிலில் கல்வெட்டு வைத்ததும் குறிப்பிடதக்கது.



அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பெற்றிடுங்கள்.
யுட்யூப்👉🏼Subscribe Now
டுவிட்டர்👉🏼Follow
ஆப்👉🏼Install Now

No comments:

Post a Comment