2.ஓ ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,எமி ஜாக்சன்,அக்ஷய குமார் நடிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உலகமுழுவதும் வெளியிட்டுள்ள ஒரு சைன்ஸ்பிக்ஷன் படம்.
கதை
ஊருக்கு வெளியில் பறவைகளை உயிராக நேசித்து பார்த்து பார்த்து வளர்த்துவருகிறார் பறவைகளின் ஆர்வளர் அக்ஷய குமார்.செல்போன் டவர் கம்பனிகள் சட்ட விரோதமாக அலைவரிசைகளை அதிகபடுத்துகிறார்கள் அதனால் ரேடியேஷன்களால் குருவியினங்கள் அழிகிறது அக்ஷய குமார் நீதிமன்றமதிற்கு செல்கிறார் ஒன்றும் எடுபடவில்லை மனமுடைந்து செல்போன் டவரில் தூக்குப்போட்டு தொங்கிவிடுகிறார்.அவரது உடலில் இருந்து ஆரா என்கின்ற ஒரு சக்தி வெளியேருகிறது இறந்த பறவைகளின் ஆராவும் அக்ஷய குமாரின்(பக்ஷி ராஜன்)ஆரா ஓடு இணைந்து செல்போன்களை காய்பற்றுகிறது அவைகள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து ஒருபறவையை போன்று உருவாகி ஊரை நாசம் செய்கிறது.
சிட்டி ரோபோவை மறுபடியும் ரீ அக்டிவேட் செய்து அப்பறவையை அழிக்க முயற்சி செய்கிறார் வசீகரன் சிட்டி பக்ஷி ராஜனை(அக்ஷய குமார்)எப்படி அழிக்கிறார் என்பதுதான் மீதி கதை.
விமர்சனம்
எந்திரன் படத்தோடு இந்த 2.ஓ"வை ஒப்பிட்டால் 2.ஓ சற்று அப்கிரேடு என்றுதான் தோன்றுகிறது காரணம் கலக்கலான கிராஃபிக்ஸ் ,சண்டை காட்சிகள் ஏ.ஆர்.ரஹமானின் பின்னனி இசை என்று படத்திற்கு பிலஸ் தான்.நிரவ்ஷாவின் ஒளிபதிவு படத்தின் காட்சிகளை வேற லெவலுக்கு எடுத்துசென்றுள்ளது.
எமி ஜாக்சன் வசீகரன் ரஜினிக்கு சின்ன சின்ன வேலைகள் செய்யும் சுட்டி ரோபோவைபோல் படத்தின் ஆரம்பத்தில் இருந்து காட்டிருந்தாளும் படத்தில் வில்லனை அழிக்கும் காட்சிகளில் எமியின் ஆக்ஷன் நடிப்பு மாஸ் தான்.அடிக்கடி வடிவேலு,கமல், வசனங்களை சொல்லி நக்கலடித்து கலகலப்பாக காட்சிகளை நகர செய்கிறார் எமி.
அக்ஷய குமார் (பக்ஷி ராஜன்) பறவைகளின் மீது தனி பாசம் வைத்து பார்த்துக்கொள்ளும் காட்சிகளில் நல்ல மணிதராக நம் மனதிற்குள் இடம்பிடிக்கிறார் அதையடுத்து வில்லனாக மாறும்போது அந்நியன் ஸ்டைலில் செல்போனை வைத்தே செல்போன் சம்மந்தபட்டவர்களை வித்தியசமாக அழிக்கிறார்.
படத்தின் இறுதிகட்டதில் வரும் 3.0மினிபோட்ஸ் லோவ் பேட்டரியான ரஜினி ரோபோக்களுக்கு புறா மீது வந்து உதவும் காட்சிகள் .புறாவை வைத்து நக்கலாக வில்லனை கலாய்க்கும் கட்சிகள் குழந்தைகளை குறிவைத்து எடுக்பட்டவை என்றே நினைகலாம்.
செல்போன் ரேடியேஷன் பறவைகளை அழித்துவிட்டால் நம் விவசாயமும் அழிந்துவிடும் என்றும் தொழில்நுட்ப்பத்தை நன்மைக்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது என்ற சமூக விழிப்புணர்வு தகவல்களை ரஜினி அக்ஷய குமாரைவைத்து ஷங்கர் சொல்லிருப்பது அல்டிமேட்
மொத்தத்தில் 2.ஓ ஒரு டிஜிட்டல் பேய்படம் ஆறிலிருந்து அறுபதுவரை பார்க்க வேண்டிய படம்.
No comments:
Post a Comment